Wednesday, December 3, 2008

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து 'தை' கவிதையிதழ்


ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து 'தை' கவிதையிதழ்

கவிதை உறவுகளே..
வரவிருக்கிற 'தை' கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.

கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை
10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி
தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

thaiithaz@gmail.com


குருதிக் கசியும் மொழியில்
நாடிழந்த புலம்பெயர் வாழ்வை
ஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.
சிறந்த கவிதைகள் தை இதழிலும்
பாராட்டுதலுக்குரிய கவிதைகள்
தை வலைப்பதிவிலும் வெளிவரும்.
அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும்
கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்..


மிக்க தோழமையோடு
இசாக்
http://thaiithaz.blogspot.com/


More than a Blog Aggregator

Thursday, August 21, 2008

தமிழ்வெளி புதிய முகப்பு மற்றும் வேகமான தரவிறக்கம்


தமிழ்வெளி தனது பயனாளர்களுக்கான சேவை மேம்படுத்தலை தொடர்ந்து செய்து வருகின்றது, தற்போது தமிழ்வெளி திரட்டியின் முகப்பு பக்கம் மேம்படுத்தப்படுள்ளது, பதிவில் உள்ள படம் சிறியதாகப்பட்டு நகப்படமாக காண்பிக்கப்படுகிறது, மேலும் தமிழ்வெளியில் இணைக்கப்பட்ட புகைப்பட பதிவுகளிலிருந்தும் படங்கள் காண்பிக்கபப்டுகின்றது.






குறைந்த வேக இணைய தள தரவிறப்பாளர்கள்(Dial up connection) பயனுறும் விதத்தில் வேகமான தரவிறக்கம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, "வேகமான தரவிறக்கம்" என்பதை தேர்ந்தெடுத்தால் எளிமையான முகப்பபு காண்பிக்கப்படும், மேலும் அடுத்த முறை தமிழ்வெளி இணைய தளத்திற்கு வரும் போது தானாகவே உங்களுடைய முந்தைய தேர்வினை நினைவுகொண்டு எளிய முகப்போ அல்லது பட முகப்போ வரும்.

Sunday, April 13, 2008

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ்வெளி இணைய தளம் இன்று தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...

தமிழ்வெளி வாசகர்கள், வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் தமிழ்வெளி நிர்வாகத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்குகின்றோம்....

தமிவெளி திரட்டி சேவை மட்டுமின்றி வேலைவாய்ப்பு இணைய தளம் சேவையையும் வழங்கி வருகின்றது....

இந்த இரண்டாம் ஆண்டில் தமிழ்வெளியின் சார்பில் "வீதி" இணைய இதழும் அச்சிதழாக தற்போது வந்து கொண்டிருக்கும் ஆனால் இணையத்தில் பெற இயலாத சில பத்திரிக்கைகளையும் தமிழ்வெளி சார்பில் வெளியிட உள்ளோம்.

வாசகர்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு மீண்டும் தமிழ்வெளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்...

More than a Blog Aggregator

தை-கவிதை திருவிழா

தமிழ்வெளி வேலைவாய்ப்பு தளம்

தமிழ்வெளி பேட்டிகள்

Thursday, March 20, 2008

மேம்படுத்தப்பட்ட திரட்டி எஞ்சின்

தமிழ்வெளி இணைய தளத்தின் திரட்டியில் கடந்த டிசம்பர் 2007,சனவரி 2008, பிப்ரவரி 2008 இல் இணைக்கப்பட்ட வலைப்பதிவுகள் எல்லாம் உடனடியாக இணைக்காமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தற்கு வருந்துகிறோம், கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் பதிவுகளை இணைக்க ஆரம்பித்துள்ளோம்....

தினம் சில பதிவுகள் இணைக்கப்படும் போது திரட்டியின் செயல்பாட்டு வேகத்தையும் பதிவுகளை திரட்டும் வேகத்தையும் அதிகமாக்க தொழில் நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்ததால் கடந்த மூன்று மாதங்களாக புதிய பதிவுகள் இணைக்கப்படவில்லை, தற்போதைய மேம்படுத்தப்பட்ட திரட்டி எஞ்சினால் மேலதிகமாக நிறைய எண்ணிக்கையிலான வலைப்பதிவுகளையும் பதிவு திரட்டும் வேகத்தையும் அதிகரித்துள்ளோம்....

WWW.TAMILVELI.COM

Monday, March 10, 2008

தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளம்

More than a Blog Aggregator



தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளம் தமிழ்வெளி இணைய தளம் புதிய முயற்சியாக வேலைவாய்ப்பு தகவல் மற்றும் தேடும் இணையதள சேவையை முதன் முறையாக தமிழில் வெளியிடுகிறது, இந்த தளம் ஆங்கிலத்திலும் பயன்படுத்தும் படி உள்ளது....

இந்த தளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் குறைந்த அனுபவம்(0-4 வருடங்கள்) உள்ளவர்களுக்கான தகவல்களுக்கு முக்கியத்துவமளிக்கின்றது.

உங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு தகவல்களை இந்த தளத்திற்கு தந்துதவுமாறு வேண்டுகிறோம்...

தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளத்திற்கு இங்கே சொடுக்கவும்

வேலைவாய்ப்பு விளம்பரங்களை இந்த சுட்டியில் தரலாம்...
WWW.TAMILVELI.COM

தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளம்




தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளம் தமிழ்வெளி இணைய தளம் புதிய முயற்சியாக வேலைவாய்ப்பு தகவல் மற்றும் தேடும் இணையதள சேவையை முதன் முறையாக தமிழில் வெளியிடுகிறது, இந்த தளம் ஆங்கிலத்திலும் பயன்படுத்தும் படி உள்ளது....

இந்த தளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் குறைந்த அனுபவம்(0-4 வருடங்கள்) உள்ளவர்களுக்கான தகவல்களுக்கு முக்கியத்துவமளிக்கின்றது.

உங்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்பு தகவல்களை இந்த தளத்திற்கு தந்துதவுமாறு வேண்டுகிறோம்...

தமிழ்வெளி வேலைவாய்ப்பு இணைய தளத்திற்கு இங்கே சொடுக்கவும்

Sunday, February 17, 2008

தை மூன்றாம் இதழ் இணையத்தில் வெளியீடு

'தை' இது கவி'தை' திருவிழா...

உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்
கவிதை தராது
தமிழ்நெடுக உழைப்புக்கவுச்சி
இன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்து
கொண்டேயிருக்கும்...

'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழை இணையத்தில் தமிழ்வெளி இணையதளம் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

முதல் பகுதி இங்கே

Saturday, February 16, 2008

தமிழ்வெளி தள அறிமுகம்

தமிழ்வெளி இணைய தளம் சோதனை ஓட்டமாக சித்திரை 1, சென்ற தமிழ்புத்தாண்டு அன்று சோதனை ஓட்டமாக ஆரம்பிக்கப்பட்டது, அதன் பின் முறையான அறிவிப்பு ஏதுமின்றி தொடர்ந்து செயல்பட ஆரம்பித்துவிட்டது....

Blogs எனப்படும் வலைப்பதிவுகள் திரட்டும் ஒரு வலைப்பதிவு திரட்டியாக ஆரம்பிக்கப்பட்டது, ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுகளை திரட்டும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்ற திரட்டிகள் வலைப்பதிவுகளை திரட்டும் சேவையை செம்மையாக வழங்கி வருகின்றன. திரட்டி என்கிற வலைப்பதிவு திரட்டி தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.

வலைப்பதிவு திரட்டி என்பது தமிழ்வெளியில் ஒரு பகுதி மட்டுமே, தமிழ்வெளி இணைய தளம் வலைப்பதிவு திரட்டி சேவை மட்டுமின்றி வரும் காலங்களில் சமுதாயத்திற்கு தேவையான பிற சேவைகளிலும் கவனம் செலுத்தும்.

இது என்ன தமிழ்வெளி?

தினம் ஒரு தமிழ்ப்பதிவர்/வலைவாசகர் என்ற கணக்கில் விரிந்து கொண்டிருக்கும் தமிழ்வலைப்பதிவுகளையும் வாசகர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் மைதானம் தான் இந்தத் தமிழ்வெளி. தமிழ்வெளியில் வெளியாகும் வலைப்பதிவு உள்ளடக்கம்/ வலைப்பதிவு உரல் முதலானவை அந்தந்த வலைப்பதிவுகளுக்கு உரியவை. தகவலுக்காகத் திரட்டப்படும் இந்த உள்ளடக்கத்தின் முழுவடிவத்திற்கு அந்தந்த வலைபதிவுகளைத் தொடர்பு கொள்ளவும். தமிழ்வெளியின் தொழிற்நுட்ப மற்றும் வடிவமைப்பு உரிமை http://www.tamilveli.com க்குச் சொந்தமானதாகும். தமிழ்வெளி தொடர்பான கேள்விகள்/எண்ணங்கள்/பரிந்துரைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள, admin@tamilveli.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.

Tamilveli is the arena to bring together the Tamil bloggers and their readers. The blogs and their contents displayed in Tamilveli are copyrighted to the specific web blogs. Please look at the original blog address to get the full picture of the details listed in Tamilveli Tamilveli’s technical design and layout is copyrighted to www.tamilveli.com. For any queries/comments/suggestions, please contact us at admin@tamilveli.com