Sunday, February 17, 2008

தை மூன்றாம் இதழ் இணையத்தில் வெளியீடு

'தை' இது கவி'தை' திருவிழா...

உழைப்புக்கவுச்சியற்ற ஒரு சொல்லும்
கவிதை தராது
தமிழ்நெடுக உழைப்புக்கவுச்சி
இன்னும் இன்னும் அது கவிதை தரும், தந்து
கொண்டேயிருக்கும்...

'தை' இது கவி'தை' திருவிழா, பாவலர் அறிவுமதி அவர்களின் 'தை' காலாண்டிதழின் மூன்றாம் இதழை இணையத்தில் தமிழ்வெளி இணையதளம் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

முதல் பகுதி இங்கே

Saturday, February 16, 2008

தமிழ்வெளி தள அறிமுகம்

தமிழ்வெளி இணைய தளம் சோதனை ஓட்டமாக சித்திரை 1, சென்ற தமிழ்புத்தாண்டு அன்று சோதனை ஓட்டமாக ஆரம்பிக்கப்பட்டது, அதன் பின் முறையான அறிவிப்பு ஏதுமின்றி தொடர்ந்து செயல்பட ஆரம்பித்துவிட்டது....

Blogs எனப்படும் வலைப்பதிவுகள் திரட்டும் ஒரு வலைப்பதிவு திரட்டியாக ஆரம்பிக்கப்பட்டது, ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுகளை திரட்டும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்ற திரட்டிகள் வலைப்பதிவுகளை திரட்டும் சேவையை செம்மையாக வழங்கி வருகின்றன. திரட்டி என்கிற வலைப்பதிவு திரட்டி தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.

வலைப்பதிவு திரட்டி என்பது தமிழ்வெளியில் ஒரு பகுதி மட்டுமே, தமிழ்வெளி இணைய தளம் வலைப்பதிவு திரட்டி சேவை மட்டுமின்றி வரும் காலங்களில் சமுதாயத்திற்கு தேவையான பிற சேவைகளிலும் கவனம் செலுத்தும்.

இது என்ன தமிழ்வெளி?

தினம் ஒரு தமிழ்ப்பதிவர்/வலைவாசகர் என்ற கணக்கில் விரிந்து கொண்டிருக்கும் தமிழ்வலைப்பதிவுகளையும் வாசகர்களையும் ஒரே இடத்தில் சந்திக்கவைக்கும் மைதானம் தான் இந்தத் தமிழ்வெளி. தமிழ்வெளியில் வெளியாகும் வலைப்பதிவு உள்ளடக்கம்/ வலைப்பதிவு உரல் முதலானவை அந்தந்த வலைப்பதிவுகளுக்கு உரியவை. தகவலுக்காகத் திரட்டப்படும் இந்த உள்ளடக்கத்தின் முழுவடிவத்திற்கு அந்தந்த வலைபதிவுகளைத் தொடர்பு கொள்ளவும். தமிழ்வெளியின் தொழிற்நுட்ப மற்றும் வடிவமைப்பு உரிமை http://www.tamilveli.com க்குச் சொந்தமானதாகும். தமிழ்வெளி தொடர்பான கேள்விகள்/எண்ணங்கள்/பரிந்துரைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள, admin@tamilveli.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.

Tamilveli is the arena to bring together the Tamil bloggers and their readers. The blogs and their contents displayed in Tamilveli are copyrighted to the specific web blogs. Please look at the original blog address to get the full picture of the details listed in Tamilveli Tamilveli’s technical design and layout is copyrighted to www.tamilveli.com. For any queries/comments/suggestions, please contact us at admin@tamilveli.com