Saturday, February 16, 2008

தமிழ்வெளி தள அறிமுகம்

தமிழ்வெளி இணைய தளம் சோதனை ஓட்டமாக சித்திரை 1, சென்ற தமிழ்புத்தாண்டு அன்று சோதனை ஓட்டமாக ஆரம்பிக்கப்பட்டது, அதன் பின் முறையான அறிவிப்பு ஏதுமின்றி தொடர்ந்து செயல்பட ஆரம்பித்துவிட்டது....

Blogs எனப்படும் வலைப்பதிவுகள் திரட்டும் ஒரு வலைப்பதிவு திரட்டியாக ஆரம்பிக்கப்பட்டது, ஏற்கனவே தமிழ் வலைப்பதிவுகளை திரட்டும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்ற திரட்டிகள் வலைப்பதிவுகளை திரட்டும் சேவையை செம்மையாக வழங்கி வருகின்றன. திரட்டி என்கிற வலைப்பதிவு திரட்டி தற்போது சோதனை முயற்சியில் உள்ளது.

வலைப்பதிவு திரட்டி என்பது தமிழ்வெளியில் ஒரு பகுதி மட்டுமே, தமிழ்வெளி இணைய தளம் வலைப்பதிவு திரட்டி சேவை மட்டுமின்றி வரும் காலங்களில் சமுதாயத்திற்கு தேவையான பிற சேவைகளிலும் கவனம் செலுத்தும்.

No comments: