Thursday, August 6, 2009

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை உதவி பற்றிய அறிக்கை

அனைவருக்கும் வண‌க்கம்,

டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளையின் 2009 ஆம் ஆண்டு கல்வி உதவித் திட்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்முயற்சியினைத் திருவினையாக்குவது கல்வி கற்றவர்களாகிய நமது பொறுப்பாகும். கடந்த வருடம் பல உதவிக்கரங்களின் தோழமையால் வெற்றிகரமாக 25 குழந்தைகளுக்கு இவ்வறக்கட்டளை பணஉதவி செய்தது. இவ்வறக்கட்டளையின் சார்பாக அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த ஆண்டு நம்முடன் இணைந்துள்ள மற்றும் இணையவுள்ள தோழர்களின் உதவியுடன் இந்த மாத இறுதியில் 110 குழந்தைகளுக்கு பணஉதவி அளித்திட நமது அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. இதற்கான மொத்த தொகை ரூபாய் எழுபது ஆயிரம்(70,000). குழந்தைகளை தேர்வு செய்யும் விதம் மற்றும் உதவித்தொகைப் பட்டியல் பற்றிய விவரம் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நமது அறக்கட்டளையின் சேமிப்பு கணக்கில் வங்கியில் உள்ள மொத்த பணத்தொகை (31,500) முப்பத்து ஒன்று ஆயிரத்து ஐநூறு ரூபாய். திட்டமிட்டு உள்ள பணவுதவிக்கு இன்னும் ரூபாய் நாற்பதாயிரம் (40,000) எதிர்பார்க்கப்படுகிறது. நண்ப‌ர்க‌ளே அக்குழந்தைகள் நம்மிடம் எதிர்பார்ப்ப‌து மிக‌க்குறைந்த‌ அள‌விளான‌ உதவித் தொகைதான். “சிறு துளி பெருவெள்ள‌ம் என்றார் போல்” ந‌ம் ஒவ்வொருவ‌ருடைய‌ சிறு அன்பளிப்பும் ஒரு குழ‌ந்தையின் எதிர்கால‌த்தையே மாற்றிய‌மைத்திடும்.
உங்க‌ளிட‌ம் இருக்கும் ப‌ழைய புத்த‌க‌ங்க‌ளையும் இக்குழ‌ந்தைக‌ளுட‌ன் ப‌கிர்ந்து கொள்ள‌லாம் அல்லது தங்களது பழைய புத்தகங்களை டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை நூலகத்திற்கு கொடுத்து மற்ற கல்லூரி மாணவர்கள் பயன்பெறுமாறு செய்யலாம். இங்கு குறிப்பிட்டுள்ள‌ 110 குழ‌ந்தைக‌ளின் முழு விவ‌ர‌மும் இவ்வ‌ற‌க்க‌ட்ட‌ளையிலிருந்து‌ பெற்றுக் கொள்ளலாம். விருப்ப‌முடைய‌வ‌ர்க‌ள் நேர‌டியாக‌ குழ‌ந்தைக‌ளுட‌ன் தொட‌ர்பு கொண்டு ப‌ண‌உத‌வி செய்திட‌லாம் அல்ல‌து இவ்வ‌ற‌க்க‌ட்ட‌ளையின் வ‌ங்கி கணக்கிற்கு ப‌ண‌மாற்ற‌ம் செய்து அதற்கான‌ சான்றித‌ழை அற‌க்க‌ட்ட‌ளை நிர்வாகி உயர்திரு. ந‌டராஜன் ஐயா(அறங்காவலர், அலைபேசி - +91-98657 67768), அவர்களிடம் பெற்றுக்கொள்ள‌லாம்.

இவ்விர‌ண்டு முறையிலும் செய்திட‌ முடியாத‌வ‌ர்க‌ள், தயவு செய்து இங்கு குறிப்பிட்டுள்ள அலைபேசி (கிருஷ்ண பிரியா - +91 98809 60332) எண்ணைத் தொட‌ர்புகொண்டு உங்க‌ள் சேவையை நிறைவேற்றிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

முய‌ன்றால் முடியாத‌து என்ப‌து எதுவுமே இல்லை...உங்களின் இந்த சிறு முயற்சி பல இளைய தலைமுறைகளை உருவாக்கும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

சிறப்பு உதவித் தொகைக்கான விதிமுறை:
· பெற்றோர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் இறந்தவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
· இந்த கல்வி உதவித்தொகை விண்ணப்பித்த மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள பள்ளி மாணவர்கள் இருவருக்கும் கல்லூரி மாணவர்கள் இருவருக்கும் வழங்கப்படும்.
· பள்ளி மாணவராக இருந்தால் SSLC தேர்வில் 80% க்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
· இளங்கலை கல்லூரி அறிவியல் அல்லது பொறியியல் கல்லூரி மாணவராக இருந்தால் 12ம் வகுப்பில் 80% க்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
· அனைத்து தேர்வையும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
· ஆண்டு வருமானம் ரூபாய் 50,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
· இவை அனைத்திற்கும் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து நகல்களிலும், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் கையொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை விவரம்:

இடம்முதல் இடம்இரண்டாம் இடம்மூன்றாம் இடம்
பள்ளி / கல்லூரிதாய் மற்றும் தந்தை இல்லாதவர்தாய் அல்லது தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் இல்லாதவர்தாய் மற்றும் தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் அல்லது வருமானம் மிகமிக குறைவாக இருந்தால்அனைவருக்கும் வண‌க்கம்,

பள்ளி / கல்லூரிதாய் மற்றும் தந்தை இல்லாதவர்தாய் அல்லது தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் இல்லாதவர்தாய் மற்றும் தந்தை இவற்றில் எவரேனும் ஒருவர் நோய் வாய்ப்பட்டால் அல்லது வருமானம் மிகமிக குறைவாக இருந்தால்
11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு1000750500
கல்லூரிப் படிப்புகள்
இளங்கலை – UG Arts12501000750
இளங்கலை அறிவியல் 175015001250
முதுகலைமற்றும் பாலிடெக்னிக்20017501500
பொறியியல் 250022502000
பட்ட மேற்படிப்பு
ME/MBA/MCA/MSc300027502500

சிறப்பு கல்வி உதவித்தொகை விவரம் – Special Scholarship

· பள்ளி மாணவர்கள் : 75% மொத்த செலவு அல்லது ரூ. 3,500/-. (இவற்றில் எது குறைவாக
(இரண்டு நபர்கள்) இருக்கிறதோ அந்த தொகை).

· கல்லூரி மாணவர்கள்: 75% மொத்த செலவு அல்லது ரூ. 8,000/- (இவற்றில் எது குறைவாக
(இரண்டு நபர்கள்) இருக்கிறதோ அந்த தொகை).
வங்கி சேமிப்பு கணக்கு விவரம்
Bank Details
Name of the Bank - Bank of India
Account Holder Name - The DRCET
Bank account number - 830010110002351[Savings Bank Account]
*IFSC Code - BKID0008300
*MICR Code - 620013001
Branch - Tiruchirapally Main

Bank Address
Bank of India,
Teppakkulam Branch,
Near Teppakkulam Post Office,
Tiruchirappalli - 620 002

Please send your Check/DD to Trust Address
Mr. R. Natarajan, Trustee
Dr. Radhakrishnan Charitable Educational Trust,
5A, Pandian Pillai Lane,
North Andal Street,
Trichy -2, Tamilnadu State.
India

•IFSC – Indian Financial System Code.
•MICR – Magnectic Ink Character Recognition.

Saturday, July 25, 2009

இலங்கை பணி - எம். எஸ். சுவாமிநாதன் மறுப்பு

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் இலங்கையின் சிங்கள அரசு தமிழர் தாயகமான வடக்கு பகுதியின் விவசாய விளைநிலங்களை சீர்படுத்துவதாக கூறி அந்த பொறுப்பை வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக ஒருவருக்கு அனுப்பிய மின் மடலில் இலங்கை தொடர்பாக தமக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை என்றும் தாமும் இந்த பணிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அந்த மின் மடலின் தமிழாக்கம்
-------------------------------------
அன்பின் முத்தமிழ்,

தங்களின் கனிவான கடிதத்திற்கு மிக்க நன்றி. தாங்கள் தெரிவித்த தகவலுக்காக தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இலங்கை அரசாங்கதால் எந்த பணியும் எனக்கு வழங்கப் படவில்லை அல்லது இலங்கை அரசாங்கத்தின் எந்த பணியையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இங்ஙனம்
எம்.எஸ்.சுவாமிநாதன்

குறிப்பு
தமிழ்வெளி இணைய தளத்திற்கு தொடர்ச்சியாக அறிவுப்புகள் வெளியிட கோரி ஊடக அறிக்கைகளும், மின்மடல்களும் வருகின்றன, இது வரை அவற்றின் உண்மை தன்மை, அறிவுப்புகள் அனுப்புபவரின் நிலைப்பாடுகள், அனுப்புபவர்களின் மின் மடல் முகவரி தவிர்த்து அனுப்பியவர்கள் யார் என்பவற்றையெல்லாம் சரி பார்க்க இயலாது என்பதால் நாங்கள் வெளியிடவில்லை...

இதனால் பல செய்திகள் வாசகர்களை சென்றடையவில்லை, எனவே வாசகர்கள் மற்றும் அறிக்கை அனுப்புபவர்களின் செய்தி சென்றடையும் விதமாக இதில் வெளியிட உள்ளோம், உண்மை தன்மை, அனுப்பியவர்கள் நிலைப்பாடு, அனுப்பியவர்கள் யார் என்பதை கணக்கில் எடுக்காமல் அறிக்கைகளை இந்த தளத்தில் வெளியிடுவது என்று தமிழ்வெளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது...

இந்த வெளியீடுகளுக்கும் அறிக்கைகளுக்கும் தமிழ்வெளி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்று அறிவிக்கப்படுகின்றது.

Tuesday, July 7, 2009

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவிற்கு தமிழ்வெளி ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றது...

தமிழ்வெளிக்கு சிந்தாநதி ஒரு சிறப்பு பதிவர், தமிழ்வெளியில் இணைந்தவர்களில் அவர் ஒருவர் தான் blogspirit பயன்படுத்தியவர்.

சிந்தாநதி , கணிமை.காம் , தமிழ் புத்தக சந்தை இவற்றின் சிற்பி

சிந்தாநதி அவர்களின் பதிவு

இது தொடர்பான அறிவிப்பு

Sunday, July 5, 2009

சிங்கை பதிவர்கள் தமிழ்வெளி.காம் நடத்தும் மாபெரும் போட்டி - மூவருக்கு சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலா

Manarkeni 2009

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) சார்பில் 'மணற்கேணி - 2009' என்கிற என்ற ஒரு கருத்தாய்வுப் போட்டி "அரசியல் சமூகம்", "தமிழ் இலக்கியம்", "தமிழ் அறிவியல்" என்ற மூன்று பெரும் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளில் நடை பெறுகின்றன. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தவும், அவர்களின் கட்டுரைகளை பல தளங்களில் எடுத்து செல்லவும் மேலும் சிறந்த மூன்று கட்டுரைகளைப் பாராட்டும் விதமாகவும் சிறந்த கட்டுரை எழுதியவர்களை சிங்கப்பூருக்கு ஒருவாரச் சுற்றுலாவிற்கு விமானப் பயணச் சீட்டுடன் தங்குமிடம் மற்றும் இதர பொதுச் செலவுகள் பரிசாக அளிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ளவும், தமிழ் அறிஞர்களுடனான அறிமுகப்படுத்தலும் கலந்துரையாடலும் நடைபெறும்.

சிங்கப்பூர் பதிவர்கள் தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) கருத்தாய்வு போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், ஒருவரே மூன்று பிரிவுகளிலும் உள்ள அனைத்து தலைப்புகளிலும் கலந்து கொள்ளலாம், போட்டிக்கு தங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30-08-2009 (ஆகஸ்ட் 30, 2009) போட்டி தொடர்பான விதிமுறைகள், போட்டி தலைப்புகள் போன்றவைகளை www.sgtamilbloggers.com மற்றும் www.tamilveli.com இணைய தளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Monday, April 13, 2009

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்வெளி

More than a Blog Aggregator
தமிழ்வெளி இணைய தளம் இன்று தனது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது...

தமிழ்வெளி இணைய தளத்தின் முகப்பு புதிதாக மாற்றப்பட்டுள்ளது

தமிழ்வெளி வாசகர்கள், வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் தமிழ்வெளி நிர்வாகத்தின் சார்பில் நன்றியை உரித்தாக்குகின்றோம்....

வாசகர்கள், வலைப்பதிவாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு மீண்டும் தமிழ்வெளி நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்...

தமிழ்வெளி.காம்
தை இதழ்
தமிழ்வெளி வேலைவாய்ப்பு தளம்
தமிழ்வெளி பேட்டிகள்
சிறப்பு பகுதி

Wednesday, December 3, 2008

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து 'தை' கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து 'தை' கவிதையிதழ்

கவிதை உறவுகளே..
வரவிருக்கிற 'தை' கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.

கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை
10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி
தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

thaiithaz@gmail.com

குருதிக் கசியும் மொழியில்
நாடிழந்த புலம்பெயர் வாழ்வை
ஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.
சிறந்த கவிதைகள் தை இதழிலும்
பாராட்டுதலுக்குரிய கவிதைகள்
தை வலைப்பதிவிலும் வெளிவரும்.
அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும்
கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்..

மிக்க தோழமையோடு
இசாக்
http://thaiithaz.blogspot.com/

More than a Blog Aggregator

Thursday, August 21, 2008

தமிழ்வெளி புதிய முகப்பு மற்றும் வேகமான தரவிறக்கம்

தமிழ்வெளி தனது பயனாளர்களுக்கான சேவை மேம்படுத்தலை தொடர்ந்து செய்து வருகின்றது, தற்போது தமிழ்வெளி திரட்டியின் முகப்பு பக்கம் மேம்படுத்தப்படுள்ளது, பதிவில் உள்ள படம் சிறியதாகப்பட்டு நகப்படமாக காண்பிக்கப்படுகிறது, மேலும் தமிழ்வெளியில் இணைக்கப்பட்ட புகைப்பட பதிவுகளிலிருந்தும் படங்கள் காண்பிக்கபப்டுகின்றது.

குறைந்த வேக இணைய தள தரவிறப்பாளர்கள்(Dial up connection) பயனுறும் விதத்தில் வேகமான தரவிறக்கம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, "வேகமான தரவிறக்கம்" என்பதை தேர்ந்தெடுத்தால் எளிமையான முகப்பபு காண்பிக்கப்படும், மேலும் அடுத்த முறை தமிழ்வெளி இணைய தளத்திற்கு வரும் போது தானாகவே உங்களுடைய முந்தைய தேர்வினை நினைவுகொண்டு எளிய முகப்போ அல்லது பட முகப்போ வரும்.