Saturday, July 25, 2009

இலங்கை பணி - எம். எஸ். சுவாமிநாதன் மறுப்பு

வடக்கின் வசந்தம் என்ற பெயரில் இலங்கையின் சிங்கள அரசு தமிழர் தாயகமான வடக்கு பகுதியின் விவசாய விளைநிலங்களை சீர்படுத்துவதாக கூறி அந்த பொறுப்பை வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக ஒருவருக்கு அனுப்பிய மின் மடலில் இலங்கை தொடர்பாக தமக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை என்றும் தாமும் இந்த பணிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அந்த மின் மடலின் தமிழாக்கம்
-------------------------------------
அன்பின் முத்தமிழ்,

தங்களின் கனிவான கடிதத்திற்கு மிக்க நன்றி. தாங்கள் தெரிவித்த தகவலுக்காக தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இலங்கை அரசாங்கதால் எந்த பணியும் எனக்கு வழங்கப் படவில்லை அல்லது இலங்கை அரசாங்கத்தின் எந்த பணியையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

இங்ஙனம்
எம்.எஸ்.சுவாமிநாதன்

குறிப்பு
தமிழ்வெளி இணைய தளத்திற்கு தொடர்ச்சியாக அறிவுப்புகள் வெளியிட கோரி ஊடக அறிக்கைகளும், மின்மடல்களும் வருகின்றன, இது வரை அவற்றின் உண்மை தன்மை, அறிவுப்புகள் அனுப்புபவரின் நிலைப்பாடுகள், அனுப்புபவர்களின் மின் மடல் முகவரி தவிர்த்து அனுப்பியவர்கள் யார் என்பவற்றையெல்லாம் சரி பார்க்க இயலாது என்பதால் நாங்கள் வெளியிடவில்லை...

இதனால் பல செய்திகள் வாசகர்களை சென்றடையவில்லை, எனவே வாசகர்கள் மற்றும் அறிக்கை அனுப்புபவர்களின் செய்தி சென்றடையும் விதமாக இதில் வெளியிட உள்ளோம், உண்மை தன்மை, அனுப்பியவர்கள் நிலைப்பாடு, அனுப்பியவர்கள் யார் என்பதை கணக்கில் எடுக்காமல் அறிக்கைகளை இந்த தளத்தில் வெளியிடுவது என்று தமிழ்வெளி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது...

இந்த வெளியீடுகளுக்கும் அறிக்கைகளுக்கும் தமிழ்வெளி எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்று அறிவிக்கப்படுகின்றது.

Tuesday, July 7, 2009

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவிற்கு தமிழ்வெளி ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவிக்கின்றது...

தமிழ்வெளிக்கு சிந்தாநதி ஒரு சிறப்பு பதிவர், தமிழ்வெளியில் இணைந்தவர்களில் அவர் ஒருவர் தான் blogspirit பயன்படுத்தியவர்.

சிந்தாநதி , கணிமை.காம் , தமிழ் புத்தக சந்தை இவற்றின் சிற்பி


சிந்தாநதி அவர்களின் பதிவு

இது தொடர்பான அறிவிப்பு

Sunday, July 5, 2009

சிங்கை பதிவர்கள் தமிழ்வெளி.காம் நடத்தும் மாபெரும் போட்டி - மூவருக்கு சிங்கப்பூர் ஒரு வார சுற்றுலா

Manarkeni 2009

சிங்கைப் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) சார்பில் 'மணற்கேணி - 2009' என்கிற என்ற ஒரு கருத்தாய்வுப் போட்டி "அரசியல் சமூகம்", "தமிழ் இலக்கியம்", "தமிழ் அறிவியல்" என்ற மூன்று பெரும் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளில் நடை பெறுகின்றன. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்தவும், அவர்களின் கட்டுரைகளை பல தளங்களில் எடுத்து செல்லவும் மேலும் சிறந்த மூன்று கட்டுரைகளைப் பாராட்டும் விதமாகவும் சிறந்த கட்டுரை எழுதியவர்களை சிங்கப்பூருக்கு ஒருவாரச் சுற்றுலாவிற்கு விமானப் பயணச் சீட்டுடன் தங்குமிடம் மற்றும் இதர பொதுச் செலவுகள் பரிசாக அளிக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூரில் தமிழ் சார்ந்த செயல்பாடுகளை தெரிந்து கொள்ளவும், தமிழ் அறிஞர்களுடனான அறிமுகப்படுத்தலும் கலந்துரையாடலும் நடைபெறும்.

சிங்கப்பூர் பதிவர்கள் தமிழ்வெளி.காம்(www.tamilveli.com) கருத்தாய்வு போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், ஒருவரே மூன்று பிரிவுகளிலும் உள்ள அனைத்து தலைப்புகளிலும் கலந்து கொள்ளலாம், போட்டிக்கு தங்கள் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 30-08-2009 (ஆகஸ்ட் 30, 2009) போட்டி தொடர்பான விதிமுறைகள், போட்டி தலைப்புகள் போன்றவைகளை www.sgtamilbloggers.com மற்றும் www.tamilveli.com இணைய தளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.